Friday, September 25, 2009

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் ஜும்மா பேருரை
அல்லாஹ்வின் பேரருளால் 25-09-09 அன்று நமது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் சகோ: P. ஜைனுல் ஆபிதீன் ( மேலாண்மை குழு உறுப்பினர் ) அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்துள்ளார்கள்.


அன்று நடந்த ஜும்மா பேருரையில் சகோ: P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மிக சிறப்பாக உரையாற்றினார். சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




அந்த ஜும்மவில் கலந்து கொண்ட பேர்களின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.







இடப்பற்றாகுறையால் வெளிப்பகுதியில் பந்தல் அமைத்து ஜும்மாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அங்கு கலந்து கொண்ட கூட்டத்தையும் படத்தில் காணலாம்.
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் நோன்பு பெருநாள் பித்ரா விநியோகம்

அல்லாஹ்வின் பேரருளால் நமது தெற்கு தெரு கிளையின் சார்பாக நோன்பு பெருநாள் தர்மமான பித்ராவை கடந்த 19 - 9 -09 அன்று சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 2.5 கிலோ அரிசியுடன் ரூ. 50 வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் சார்பாக மொத்தம் 1000 ம் குடும்பங்களுக்கு மேல் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. இந்த வருடம் கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வசூலித்த பித்ரா தொகை ரூ. 102000 த்தை தாண்டியது. அல்ஹம்துலில்லஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் நோன்பு பெருநாள் திடல் தொழுகை


அல்லாஹ்வின் பேருதவியால் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபிவழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை தெற்கு தெரு இஸ்லாமியா பள்ளியின் விளையாட்டு மைதானமான கிஷ்கிந்தா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது.






இந்த திடல் தொழுகையில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பகுதிகளை படத்தில் காணலாம்.


















Friday, September 18, 2009




அல்லாஹ்வின் பேரருளால் ரமலான் இறுதி 10 ல் நமது மர்கசில் சகோ : மக்தூம் அவர்கள் "தவ்ஹீத் என்றால் என்ன ?" என்ற தலைப்பில் உரையாற்றினார். சுமார் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லஹ்








Sunday, September 13, 2009


அல்லாஹ்வின் பேரருளால் ரமலான் 19 ம் நோன்பு அன்று நமது தெற்கு தெரு கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பெண்கள் பயானில் சகோ: பாத்திமா அவர்கள் "கணவன் மனைவி ஒழுங்குகள்" என்ற தலைப்பில் sirappaka uraiyaatrinaar. alhamthulillah!

















தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் நோன்பு பெருநாள் பித்ரா விநியோகம்


அல்லாஹ்வின் பேரருளால் நமது தெற்கு தெரு கிளையின் சார்பாக நோன்பு பெருநாள் தர்மமான பித்ராவை கடந்த 19 - 9 -09 அன்று சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 2.5 கிலோ அரிசியுடன் ரூ. 50 வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் சார்பாக மொத்தம் 1000 ம் குடும்பங்களுக்கு மேல் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. இந்த வருடம் கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வசூலித்த பித்ரா தொகை ரூ. 102000 த்தை தாண்டியது. அல்ஹம்துலில்லஹ்!...


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 4 - 9 - 09 அன்று நடைபெற்ற ஜும்மாவில் மார்க்க சகோதரி ஒருவர் நம்முடைய மஸ்ஜித் கட்டுமான பணிக்காக வழங்கிய உதவியை படத்தில் காணலாம் .


அல்லாஹ்வின் பேருதவியால் நமது தெற்கு தெரு கிளையில் ரமலான் இறுதி 10 ல் சுமார் 2.45 மணியளவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான நள்ளிரவு தொழுகையில் மக்கள் நன்மையை பெறுவதற்காக கூடிய கூட்டதை படத்தில் காணலாம். அல்ஹம்துலில்லஹ்!


Saturday, September 12, 2009

அல்லாஹ்வின் பேரருளால் நமது தெற்கு தெரு கிளையில் ரமலான் இறுதி 10 ல் இரவு இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் சகோ: ஜலீல் ஹுசைன் அவர்கள் "நோன்பின் சிறப்புகளும் லைலதுல் கதர் இரவும்" என்ற தலைப்பில் மிகசிறப்பாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லஹ்!

Friday, September 11, 2009

விரிவாக்கப்பட்ட மஸ்ஜித் திறப்பு விழா


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 4 - 9 - 09 அன்று நமது தெற்கு தெரு கிளைக்கு முன்புறமுள்ள இடம் விரிவாக்கப்பட்டு ஜும்மா தொழுகையோடு ஐவேளை தொழுகைகள் ஆண் பெண் இரு சாராருக்கும் தனித்தனியே இடஒதுக்கீடு செய்யப்பட்டு தொழுகைகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக சகோ : அப்துன்நாசிர் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். அன்று நடைபெற்ற ஜும்மாவில் கலந்துகொண்ட மக்களின் கூட்டத்தை படத்தில் காணலாம். இதில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஜும்மாவில் ஆண்களை மிஞ்சியது பெண்களின் கூட்டம். அல்ஹம்துலில்லஹ் !