Sunday, February 28, 2010

கீழக்கரை TNTJ யின் தெருமுனை கூட்டம்....



அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 24 - 02 - 2010 அன்று கீழக்கரை TNTJ சார்பாக கீழக்கரையில் உள்ள கருப்பட்டிக்கார தெருவில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர் :- " முஹம்மது மக்தூம் "ஆலிம் அவர்கள் " சுப்ஹான மவ்லீதும் சூடான நரகமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் இதில் கலந்துகொண்டனர். அல்ஹம்துலிலாஹ்...!


கீழக்கரை TNTJ யின் இலவச கத்னா முகாம் மற்றும் தெருமுனை கூட்டம்...


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை TNTJ சார்பாக 26 - 02 - 2010 மாலை அசர் தொழுகைக்கு பிறகு கீழக்கரை அருகிலுள்ள மாயாகுளம் என்ற கிராமத்தில் ஏழை சிறுவன் ஒருவனுக்கு இலவசமாக கத்னா செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தெருமுனை பிரசாரமும் நடைபெற்றது, சகோதரர் :- " மக்தூம் " ஆலிம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...!





Friday, February 26, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்...




அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 26 - 2 - 2010 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கீழக்கரை ஜாமியா நகரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர் : " அம்ஜத் அலி " அவர்கள் " இறை நம்பிக்கை " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சகோதரர் : " அம்ஜத் அலி " மற்றும் " ஜலீல் ஹுசைன் " ஆகியோர் சிறப்பாக விடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்....!

Thursday, February 25, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்...







அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 24 - 2 - 2010 அன்று கீழக்கரை புதுத்தெருவில் நூரானியா பள்ளி அருகே நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ : அப்துல் அஸீஸ் சிறப்புரையாற்றினார்கள். அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.ல் சகோ : மக்தூம் ஆலிம் அவர்கள் இதற்க்கு சிறந்த முறையில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விடையளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...!

Wednesday, February 24, 2010

இனைவைப்பிர்க்கு எதிராக கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை





பரவலாக கீழக்கரையில் ஓதப்பட்டு வரும் மவ்லீது என்ற இணைவைப்பை கண்டித்து நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரை புதுக்குடி ஜமாஅத் செயலாளரிடமும், வடக்குதெரு ஜமாஅத் பொருலாளரிடமும், தெற்கு தெரு ஜமாஅத் பொருலாளரிடமும் கண்டன கடிதங்கள் கொடுக்கப்பட்டது.




அல்லாஹ்வின் அருட்கொடைகள்..... ஜும்ஆ உரை - கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை

Saturday, February 20, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ பேருரை


உரை :- சகோதரர் : " அப்துல் அஸீஸ் ", தலைப்பு : " அல்லாஹ் தந்த அருட்கொடைகள் ", நாள் : 19 - 2 - 2010.

Thursday, February 18, 2010

கீழக்கரை TNTJ யின் சமுதாய பணிகள்....







அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15 - 2 - 2010 அன்று கீழக்கரை TNTJ நகர் கிளை மற்றும் தெற்கு தெரு கிளை சார்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ( COLLECTOR OFFICE )ல் நடைபெற்ற கேஸ் ( GAS ) சம்பந்தமான குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டப்பட்டு அதற்கு தீர்வுகாணும் வகையில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மாணவ மாணவியர்களின் மதரஸா வகுப்புகள்....




Wednesday, February 17, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் இரவு பயான் நிகழ்ச்சி


நாள் : 14 - 2 - 2010
உரை . சகோதரர் : " அப்துல் அஜீஸ் "
தலைப்பு : " அர்ஷின் நிழல் யாருக்கு? "

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் நிதி உதவி


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 12 - 2 - 2010 அன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை சார்பாக சரியாக வாய் பேச முடியாத, வாதம் அடித்த, உழைக்க இயலாத சகோதர ஒருவருடைய குடும்பத்திற்காக ரூ. 2000 /- நிதி உதவியை கிளை செயலாளர் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்...!

Tuesday, February 16, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ உரை



ஜும்ஆ உரை :- சகோதரர் : " இலங்கை ரஸ்மி " ( மாநில பேச்சாளர் )


தலைப்பு :- " பெற்றோர் பிள்ளை உறவு "


நாள் :- 5 - 2 - 2010


மாணவ பயான் பயிற்சி வகுப்பு - கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை

நாள் : 12 - 2 - 2010

தலைப்பு : " மறுமை நாளில் மனிதனின் நிலை "

Saturday, February 13, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்










நாள் : 7 - 2 - 2010
இடம் : வடக்கு தெரு, கீழக்கரை.
சிறப்புரை : சகோதரர் :
" அப்துல் அஜீஸ் மற்றும் இம்ரான் "

Saturday, February 6, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் நிதி உதவி




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 5-2-2010 அன்று கீழக்கரை வடக்கு தெருவை சார்ந்த கால் ஊணமுற்ற சகோதரி ஒருவரின் கால் சப்பாத்திர்காக நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை சார்பாக ரூ. 1400/- ஐ தலைவர். ஜகுபர் அவர்கள் வழங்கினார்கள். இந்த உதவியை அவரது தாயார் பெற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்..!

Tuesday, February 2, 2010

கீழக்கரை TNTJ சார்பாக தெருமுனை கூட்டங்கள்....


அல்லாஹ்வின் பேரருளால் கீழக்கரை TNTJ சார்பாக நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் சகோ. மக்தூம் ஆலிம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் என அதிகமான மக்கள் காலத்துகொண்டு பயனடைந்தனர்.











இக்கூட்டத்தின் இறுதியில் பொதுமக்களிடத்தில் 10 கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்