Wednesday, March 31, 2010



அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 31-3-2010 தேதியன்று இராமநாதபுரத்தில் கனகமணி மருத்துவமனையில் அவசர தேவைக்காக O +ve இரத்தம் தேவைப்பட்ட ஒருவருக்காக நமது TNTJ தெற்கு தெரு கிளை சார்பாக சகோதரர்:- சதுருதீன் அவர்கள் O +ve இரத்தத்தை உயிர் காப்பதற்காக கொடுத்து உதவினார். அல்ஹம்துலில்லாஹ்...!


கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் பயான் நிகழ்ச்சி




அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 30-3-2010 தேதியன்று நமது TNTJ தெற்கு தெரு கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் அவர்கள் "கப்ரு வாழ்க்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார் 40க்கும மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...!


Saturday, March 27, 2010

கீழக்கரை TNTJ யின் செயல்பாடுகள்

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 19-3-2010 தேதியன்று கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை மற்றும் நகர் கிளை சார்பாக கோவை, ஆனைமலை பள்ளிவாசல் வசூலுக்காக சுமார் ரூ. 20000/- க்கும் மேல் ( ரொக்கமாகவும், இரண்டு ஜோடி கம்மல், ஒரு மோதிரம் ) நன்கொடையாக வழங்கப்பட்டது . அதனுடன் சகோதரர்:- நசீருதீன் என்பவர் ரூ. 7500/- நனகொடையாக வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.....!

Thursday, March 25, 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 23-3-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரை, 500 பிளாட் என்ற இடத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் அவர்கள் " அல்குரானும் மவ்லீதும்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து சகோதரர்:- ஹாஜா முஹைதீன் அவர்கள் ஜூலை 4 பற்றி விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

Sunday, March 21, 2010

மாணவர்கள் பயான் பயிற்சி வகுப்பு - TNTJ தெற்கு தெரு கிளை - கீழக்கரை


















அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21 -3 -2010 தேதியன்று நமது TNTJ தெற்கு தெரு கிளை "மஸ்ஜிதுர் ரஹ்மான்" பள்ளியில் மாணவர்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர் :- ஆதில், முஜீப், ஹபீல்தீன், நவ்பின், மன்சூர் ஆகியோர் தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சிறாந்த முறையில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியின் இறுதியில் சகோதரர் :- ஜலீல் ஹுசைன் அவர்கள் மாணவர்கள் பேசிய தலைப்புகளில் விளக்கமளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....!





பெண்கள் பயான் நிகழ்ச்சி - TNTJ தெற்கு தெரு கிளை - கீழக்கரை



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 19 -3 - 2010 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளை மர்கசில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரி :- யாஸ்மின் ஆலிமா அவர்கள் "இஸ்லாத்தில் அமலும், கல்வியும்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். ஆண்களும் , பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...!


Saturday, March 20, 2010

TNTJ தெற்கு தெரு கிளையின் இரவு பயான் நிகழ்ச்சி

உரை :- சகோதரர் : ஜிப்ரீல் ஆலிம், தலைப்பு : தூய இஸ்லாத்தை பின்பற்றாதது ஏன், நாள் :- 18-3-2010

TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ உரை - கீழக்கரை


உரை :- சகோதரர் : அபூபக்கர் சித்திக் (கோவை), தலைப்பு : தர்மத்தின் சிறப்பு,
நாள் : 19-3-2010

Friday, March 19, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை முயற்சியால் நிறுத்தப்பட்ட கொடிமரம் ஏற்றும் விழா





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 16 - 3 - 2010 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக வடக்கு தெருவில் " முஹைதீன் அப்துல் காதர் ஜெய்லானி " பெயரால் 17 - 3 - 2010 அன்று ஏற்றப்படும் கொடிமர நிகழ்ச்சிக்கு எதிராக போடப்பட்ட தெருமுனை பிரசாரத்தினாலும் அல்லாஹ்வின் உதவியை கொண்டும் அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.....

Wednesday, March 17, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சிறுவர் சிறுமிகளின் மதரஸா ( மகதப் ) பாட வகுப்புகள்....




அல்லாஹ்வின் பேரருளால் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் சுமார் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுவரும் சிறுவர்களுக்கான மதரஸா ( மகதப் ) பாட வகுப்பில் நாற்பதுக்கும் ( 40 ) மேல் சிறுவர்கள் தஜ்வீத் முறையில் பாடம் பயின்று வருகிறார்கள். இதில் குர்ஆன் மனனம், துஆக்கள் மனனம்போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.


அதேபோல் கடந்த ரமலானிலிருந்து துவங்கப்பட்ட சிறுமிகளுக்கான மகதப் பாட வகுப்புகளில் சுமார் முப்பதுக்கும் ( 30 ) மேற்பட்ட சிறுமிகளுக்கும் இதுபோன்ற அணைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்...!


கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனைகூட்டம்







அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 16-3-2010 அன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை வடக்குதெரு கொந்தகருணை அப்பா தர்கா செல்லும் வழியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் :- அப்துல் அஸீஸ் அவர்கள் " மவ்லீது இறைவணக்கமா ? " என்ற தலைப்பிலும் சகோதரர் :- அசாயிம் சயீத் அவர்கள் " இஸ்லாத்தின் பார்வையில் கூடு கொடி " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ்....!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மாணவர்கள் பயான் பயிற்சி வகுப்பு





அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 12-3-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் மாணவர்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்:- முஜீப், நவ்பீன், ஹபீல்தீன் ஆகியோர் தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சிறப்பாக உரையாற்றினார்கள். இதில் சிறுவர்கள் பேசிய தலைப்புகளில் சகோதரர் :- ஜலீல் ஹுசைன் அவர்கள் இறுதியாக விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லஹ் ...!





கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ உரை







அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 12-3-2010 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர் :- முஸ்தபா அவர்கள் "கவலை வேண்டாம்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். கூட்டம் நிறைந்து வெளிப்பகுதிகளிலும் மக்கள் தொழுதனர். அல்ஹம்துலில்லாஹ்.....!


Saturday, March 13, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு


அல்லாஹ்வின் பேரருளால் நமது TNTJ தெற்கு தெரு கிளை " மஸ்ஜிதுர் ரஹ்மான் " பள்ளியில் வாரத்தில் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமைவரை தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய பெண்களுக்கான குர்ஆன் வகுப்பில் சகோதரி :- யாஸ்மின், மெஹருன்னிஷா, ஆயிஷா போன்ற ஆலிமாக்கள் குர்ஆன் விளக்கவுரைநடத்திவருகிறார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறுகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்....!

Wednesday, March 10, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி....


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 7-3-2010 தேதியன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் :- அப்துல் அஸீஸ் அவர்கள் " இஸ்லாத்தை அறிய ஆர்வம் வேண்டும் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....


Monday, March 8, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ உரை....




அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 5-2-2010 தேதியன்று நமது TNTJ மஸ்ஜிதுர் ரஹ்மான் தெற்கு தெரு கிளையில் சகோதரர்:- "சுல்தான்" ( மாநில பேச்சாளர் ) அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். பள்ளிக்கு வெளியிலும் மக்கள் தொழுதனர். அல்ஹம்துலில்லாஹ்...!

Sunday, March 7, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கடன் உதவி


அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த 18-2-2010 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை புதுதெரு ஜாமியா நகரை சேர்ந்த ஏழை சகோதரி ஒருவருடைய வாழ்வாதார தேவைக்காக திருப்பி செலுத்தும்வன்னம் கடனுதவியாக ரூ . 4000 /- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!

Thursday, March 4, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்மா உரை...


நாள் :- 26 - 2 - 2010
உரை :- சகோதரர் : அப்துல் அஸீஸ்
தலைப்பு : மறுமையும் மனிதனும்

Wednesday, March 3, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்....






இடம் : வடக்கு தெரு, கீழக்கரை.


உரை :- சகோதரர் : அப்துல் அஸீஸ் மற்றும் சகோதரர் :- ஜலீல் ஹுசைன் .
தலைப்ப்பு :- " இஸ்லாத்தின் இன்றைய பெண்களின் நிலை "

அல்லாஹ்வின் பேரருளால் 2 - 3 - 2010 அன்று நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சகோதரர் :- அப்துல் அஸீஸ் மற்றும் சகோதரர் :- ஜலீல் ஹுசைன் ஆகியோர் கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...