Tuesday, July 27, 2010

வழுதூர் கிளையின் தெருமுனை கூட்டம்







அல்லாஹ்வின் உதவியால் கடந்த 26-7-2010 தேதியன்று இராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிளையின் சார்பாக நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர்: "இம்ரான் கான்" மற்றும் "தமீம்" ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..........!

கீழக்கரையில் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" பேனர்கள்




Saturday, July 24, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் இலவச கத்னா முகாம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-7-2010 தேதியன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை புது கிழக்கு தெருவை சார்ந்த ஏழை குடும்பத்திலுள்ள இரண்டு சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா என்ற சுன்னத் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..........!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கல்வி உதவி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 20-7-2010 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரையில் உள்ள ஏழை குடும்பத்தை சார்ந்த ஹைராத்துல் ஜலாலியா பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய 3 மாணவ மாணவியருக்கு இலவச பள்ளிசீருடை வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...........!

Wednesday, July 21, 2010

கீழக்கரை TNTJ யின் நிதி உதவி

கீழக்கரையில் தீ பிடித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கீழக்கரை TNTJ சார்பாக ரூ. 3000/- நிதி உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....!

Sunday, July 18, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கல்வி உதவி




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 15-7-2010 தேதியன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பில் கீழக்கரையை அடுத்துள்ள கும்பிடுமதுரை என்ற கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 50 க்கும் மேல் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் இலவச பள்ளிச்சீருடை வழங்கப்பட்டது. இதனை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஊராட்சி தலைவர் முன்னிலையில் நமது கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..........!

Friday, July 16, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி




அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 10-7-2010 தேதியன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ : அசாயிம் சயீத் அவர்கள் " மிஹ்ராஜும் அதன் படிப்பினைகளும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்......!

Tuesday, July 13, 2010

இஸ்லாமியர்களுக்கு எதிரான கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் மத சீண்டுதலும் கீழக்கரை TNTJ க்கு எதிரான அவதூறு பிரச்சாரமும்




கடந்த 8-7-2010 தேதியன்று கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் 12 ஆம் மாணவரும் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை பொருளாளருமான சகோதரர் : முஜீப் என்பவர் தாடி வைத்துகொண்டு பள்ளிக்கூடத்திற்கு வந்ததன் காரணமாக " தாடியை எதுத்தால்தான் பள்ளிக்கு வரவேண்டும் இல்லையென்றால் TC யை தந்து பள்ளியை விட்டு நீக்கிவிடுவேன் என்று அந்த பள்ளி முதல்வர் மிரட்டியுள்ளார். இந்த தீமையை தட்டி கேட்ட TNTJ வினருக்கு " இது பள்ளியின் விதிமுறைகள் என்றும் அம்முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் 12-7-2010 தினமலர் நாளிதழிலும் தலிபான் போன்று செயல்படும் TNTJ என்றும் இப்பள்ளி நிர்வாகம் கீழக்கரை TNTJ க்கு எதிராக புகார் மனு கொடுத்துள்ளது.......!

Thursday, July 1, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜூலை 4 தெருமுனை கூட்டங்கள்







அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 29-6-2010, 30-6-2010 மற்றும் 1-7-2010 ஆகிய தேதிகளில் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை மீன்கடை தெரு, முஸ்லிம் பஜார் மற்றும் கிழக்கு தெரு ஆகிய இடங்களில் ஜூலை 4 சம்பந்தமான தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர்: அப்துல் சர்தார், அப்துல் அஸீஸ், இம்ரான் மற்றும் தமீம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்................!