Friday, August 27, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ பேருரை


நாள் : 27-8-2010
உரை : நிசார் கபீர்
தலைப்பு : "ஜும்ஆவின் ஒழுங்குகள்"

Wednesday, August 25, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி




அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 24-8-2010 தேதியன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரர்: முஹம்மது தாஹா அவர்கள் "உள்ளத்தை ஈர்ற்கும் குர்ஆன்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சிறப்பாக விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...........!

Tuesday, August 17, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 14-8-2010 தேதிமுதல் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியாக சகோதரர்:- நிசார் கபீர் அவர்கள் "நபிமார்கள் வாழ்வு தரும் படிப்பினை" என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கொலந்துகொண்டு பயன்பெறுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்......!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் இப்தார் நிகழ்ச்சி




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்த வருட ரமலான் மாதத்தில் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரவு தொழுகைக்கு பிறகு நடைபெறும் பயான் நிகழ்ச்சியில் மக்களுக்கு தேநீர் கொடுக்கப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்............!

Sunday, August 15, 2010

கீழக்கரை 500 பிளாட்டில் TNTJ கிளை உதயம் - ஜும்ஆ ஆரம்பம்







அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 13-8-2010 தேதியன்று கீழக்கரை 500 பிளாட்டில் TNTJ கிளையில் ஜும்ஆ நடைபெற்றது. இதில் சகோதரர்:- சித்திக் அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். ரமலான் முதல் நாள் ஆரம்பிக்கப்பட்டு இரவுத்தொலுகையோடு ஐவேளை தொழுகைகளும் ஆண்களும் பெண்களும் தொழும் வகையில் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.........!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ரமலான் சொற்பொழிவு நிகழ்ச்சி




நாள்:- 13-8-2010
உரை:- நிசார் கபீர்
தலைப்பு:- பிரார்த்தனை

Saturday, August 14, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ரமலான் சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 12-8-2010 தேதியன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் இரவு தொழுகையை அடுத்து நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோதரர்:- நிஸார் கபீர் அவர்கள் "நன்மைகளை பெற்றுத் தரும் ரமலான்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இதில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.........!

Friday, August 13, 2010

இஸ்லலம் கூறும் குடும்பவியல் என்ற சஹர் நேர நிகழ்ச்சியின் அறிவிப்பு பேனர்கள்




அல்லாஹ்வின் கிருபையால் இந்த வருட ரமலான் மாதத்தில் TNTJ மாநில தலைமையகத்தில் சகோதரர்:- P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உரையாற்றும் "இஸ்லாம் கூறும் குடும்பவியல்" என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் அறிவிப்பு பேனர்கள் கீழக்கரையில் இரண்டு முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்........!

கீழக்கரை TNTJ யின் சஹர் பாங்கு நோட்டீஸ் விநியோகம்


அல்லாஹ்வின் பேரருளால் இந்த வருட நோன்பிற்கான சஹர் பாங்கு சம்பந்தமான விழிப்புணர்வு நோட்டிசை கீழக்கரையில் வீடு வீடாக விநியோகம் செய்தது கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள். அல்ஹம்துலில்லாஹ்..........!

Tuesday, August 10, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் பயான் நிகழ்ச்சி




அல்லாஹ்வின் பேரருளால் 10-08-2010 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற இரவு பயான் நிகழ்ச்சியில் சகோதரர்:- அப்துல் சத்தார் அவர்கள் "ரமலான் மாதம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.............!

Wednesday, August 4, 2010

கீழக்கரையில் INTJ என்ற பொய்யன் TJ யின் அராஜக செயல்











அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 1-8-2010 அன்று கீழக்கரை TNTJ யின் சார்பாக நடைபெற்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சிக்கு வரும் மக்களை தடுக்க நினைத்த கீழக்கரை INTJ யினர் கீழக்கரையில் ஒட்டப்பட்டிருந்த மாற்றுமத சகோதர சகோதரிகளை அழைத்து நடத்தக்கூடிய அந்த நிகழ்ச்சியின் போஸ்டர்கள் மீது "மக்கள் ரிப்போர்ட்" என்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள், அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து மாபெரும் வெற்றியை தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்........!

கீழக்கரை TNTJ யின் இரத்ததான முகாம் பேனர்கள்




Tuesday, August 3, 2010

கீழக்கரையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி











அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 01-08-2010 அன்று கிழக்கரை TNTJ சார்பாக நடைபெற்ற " இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " என்ற மாற்று மதத்தவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். மாற்று மதத்தவர்களின் கேள்விகளுக்கு சகோதரர்: S. ஹாமின் இப்ராஹீம் (UAE மண்டல ஒருங்கிணைப்பாளர் ) அவர்கள் சிறப்பாக விடையளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...........!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி


அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த 26-07-2010 அன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக " வாதம் நோயால் " பாதிக்கப்பட்ட ஏழை சகோதரர் ஒருவருக்குக்கு ரூ. 3000/- மருத்துவ வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....!