Monday, September 27, 2010

கீழக்கரை TNTJ யின் தொழில் உதவி


அல்லாஹ்வின் கிருபையால் 22-9-2010 தேதியன்று கீழக்கரை TNTJ யின் சார்பாக கீழக்கரை 500 பிளாட்டை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு சிறு தொழில் உதவியாக ரூ. 10000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..............!

Saturday, September 25, 2010

கீழக்கரையில் அல்-முபீன் தவ்ஹீத் கல்லூரி ஆரம்பம்




அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த 21-9-2010 தேதியன்று கீழக்கரையில் ஆண்களுக்கான அல்-முபீன் தவ்ஹீத் கல்லூரி கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி துவக்க விழாவிற்காக TNTJ யின் மாநில துணை தலைவர்:- கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். இன்ஷா அல்லாஹ் வருகின்ற 1-10-2010 தேதிமுதல் கல்லூரி துவங்கப்படும். அல்ஹம்துலில்லாஹ்.................!

Friday, September 24, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் அறிவுத்திறன் போட்டி




அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 19-9-2010 தேதியன்று நமது ஜமாஅத் சார்பாக ரமலான் மாதத்தில் நடைபெற்ற பொதுமக்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் சரியாக பதிலளித்தோருக்கு குழுக்கள் முறயில் தேர்வு செய்யப்பட்டு 8 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..............!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 9-9-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை வழக்கு தெருவை சார்ந்த ஏழை சகோதரியின் பிரசவத்திற்காக ரூ. 3000/- நன்கொடையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.............!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மாற்றுமத தாவ பணிகள்


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 9-9-2010 அன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கடந்த நோன்பு அன்று இஹ்திகாப் இருந்த புதிதாக இஸ்லாத்தை ஏற்ற நான்கு சகோதரர்களுக்கு சகோதரர்: P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......................!

Saturday, September 18, 2010

கீழக்கரை TNTJ யின் பித்ரா விநியோகம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த நோன்பில் மக்களிடத்தில் பித்ரா வசூலாக ரூ. 124250 வசூலிக்கப்பட்டு சுமார் 960 க்கும் மேற்பட்ட கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு அரிசியாகவும் பணமாகவும் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..............!

Monday, September 13, 2010

கீழக்கரை TNTJ யின் நோன்பு பெருநாள் திடல் தொழுகை


அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் 10-9-2010 தேதியன்று கீழக்கரை TNTJ சார்பாக கீழக்கரை கிழக்கு தெரு, பட்டானியப்பா அருகில் அமைந்துள்ள குல்லிஸ்தான் என்ற திடலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகையில் சகோதர்:- தாவுத் கைசர் ( மாநில பேச்சாளர், TNTJ ) அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். இந்த திடல் தொழுகையில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்................!

Sunday, September 12, 2010

கீழக்கரை TNTJ நகர் கிளையின் தொழில் உதவி


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 6-9-2010 தேதியன்று கீழக்கரை நகர் கிளையின் சார்பாக கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடி என்ற ஊரை சார்ந்த ஏழை குடும்பத்துக்கு தொழில் உதவியாக தேநீர் பாதுகாப்பு தூக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......!

Saturday, September 11, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மாற்றுமத தாவா


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 4-9-2010 தேதியன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு சகோதரர். P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிபெயர்த்த குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...................!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் வட்டியில்லா கடனுதவி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 3-9-2010 தேதியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை ஜாமியா நகரை சேர்ந்த ஏழை சகோதரருக்கு தவணை அடிப்படையில் ரூ. 3000/- கடனுதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்................!

Sunday, September 5, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தொடர் பயான் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த நோன்பு 20 நாட்களாக கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தொடர் பயான் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் : நிசார் கபீர் MISC அவர்கள் "நபிமார்கள் வாழ்வு தரும் படிப்பினை" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...........!