Saturday, October 30, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் பயான் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 30-10-10 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்:- ஜலீல் ஹுசைன் அவர்கள் "குழப்பவாதிகளின் குழப்பங்கள்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்............!

Wednesday, October 27, 2010

கீழக்கரை TNTJ யின் தெருமுனை பிரச்சாரம்




அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த 26-10-10 தேதியன்று கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கீழக்கரை கிழக்கு தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:- மக்தூம் அவர்கள் "ஈமானின் கிளைகள்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.......!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 25-10-10 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை அல்-அக்ஸா நகரில் வசிக்கும் கால் பாதிக்கப்பட்ட ஏழை பெரியவருக்கு ரூ. 2000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!

Tuesday, October 26, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ உரை


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை 22-10-10 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்: "செய்யது" அவர்கள் "பெரும்பாவங்கள்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...........................!

Thursday, October 14, 2010

ராமநாதபுரத்தில் நக்கீரன் பத்திரிக்கையை கண்டித்து ஆர்பாட்டம்

அல்லாஹ்வின் உதவியால் கடந்த 4-10-2010 தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பணிமணி முன்பு நடைபெற்ற நக்கீரன் என்ற பத்திரிக்கையை கண்டித்த ஆர்பாட்டத்தில் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை, நகர் கிளை, 500 பிளாட் கிளையின் சார்பாக ஏராளமான ஆண்களும் பெண்களும் அழைத்து செல்லப்பட்டு இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளசெய்யப்பட்டது. இதில் சகோதரர்: அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தி பத்திரிக்கைக்கும் செய்தி கொடுக்கப்பட்டது......

Saturday, October 2, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மாணவர் பயான் பயிற்சி வகுப்பு











அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த 28-9-10 தேதியன்று நமது கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேக்கு தெரு கிளையில் அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மாணவர்களுக்கான பயான் பயிற்சி வகுப்பில் சுமார் 9 மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...............!

Friday, October 1, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் பயான் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 27-9-10 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்: முஜீபுர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்................!