Friday, December 31, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ பேருரை

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை 31-12-10 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்: "முஹம்மது ஜின்னாஹ் " அவர்கள் "அல்லாஹுவின் வல்லமை " என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...........................!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 30-12-2010 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக சென்னையை சார்ந்த மர்யம் பீவி என்பவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்தினால் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்ய நேர்ரிட்டது நமது தெற்கு தெரு கிளையின் சார்பாக மருத்துவ உதவியாக ரூ. 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............!

Sunday, December 26, 2010

TNTJ தெற்கு தெரு கிளையின் உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 26-12-2010 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:"முஹம்மதுமக்தூம் " அவர்கள்"வீண்விரயம் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா..................................!

ஜும் ஆ உரை

அல்லாஹ்வின் திருப்பெயரால்

24_12_2010 வெள்ளிகிழமை அன்று நமது
கீழக்கரை TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வாவில்

சகோதரர்: "பக்கீர் முஹம்மது அல்தாபி"
(TNTJ மாநில தலைவர் )
அவர்கள் ஜும் ஆ
உரை நிகழ்த்தினார்கள். "பொருளாதாரம்" என்ற
தலைப்பில் பேசிய அவர் ஹலால் அல்லாத வழியில்
பொருளாதாரம் வந்தால் அது எவ்வளவு பெரிய
வழிகேட்டில் விடும் என்பதையும் வணக்கத்தில் சிறந்த
வணக்கமான பிரார்த்தனையை இறைவனிடம் நெருங்க விடாமல்
செய்துவிடும் என்பதை அல்லாஹ்வின் வேத வசனங்களோடும்
அல்லாஹ்வின் தூதர் அழகிய முன் மாதிரியான நபிகள் நாயகம் (ஸல் )
அவர்களின் வாழ்க்கை வரலாறில் இருந்தும் மிக தெளிவாகவும்
எளிமையாகவும் விளக்கினார்ர்கள் ஏரளாமான மக்கள் வந்திருந்ததால்
அவர்களுக்கு பள்ளிக்கு வெளியே தார்பாய் விரித்து
தொழுவதற்கு வசதி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா ..........................!

Friday, December 24, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ பேருரை

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை 24-12-10 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்: "அர்சத் அலி " அவர்கள் "வரதச்சனை ஒரு வன்கொடுமை" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...........................!

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் திருப்பெயரால்
22 /12 /2010 அன்று கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த
சகோதரர் ஒருவருக்கு நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
500plot கிளை சார்பாக B பாசிடிவ் ரத்தம் ஒரு unit வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.............................!

TNTJ தெற்கு தெரு கிளையின் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த வியாழன் கிழமை 23-12-2010 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரி :"யாஸ்மீன் " அவர்கள் "கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா...................................!

Thursday, December 23, 2010

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500plot கிளை
சார்பாக கீழக்கரை sn தெருவை சேர்ந்த சகோதரர்
ஒருவருக்கு O நெகடிவ் ரத்தம் ஒரு unit வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்............................

வாரி வழங்கிய வள்ளல்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
வாரி வழங்கிய வள்ளல்கள்
கீழக்கரையில் முழு நேர ஏகத்துவ
பிரச்சாரத்திற்கு உதவி கொண்டிருக்கும்
TNTJ டிவி சானலை மேலும் மெருகூட்டவும்
இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 27
பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்திற்கும்
தனது நகையை ஒரு சகோதரி வாரி வழங்கினார்கள்
அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்
நற்கூலியை வாரி வழங்க துவ ஆ செய்யுங்கள் இது போல்
நமது ஜமாஅத்தின் மீது நம்பிக்கை வைத்து வாரி வழங்கும்
மற்றும் வாரிவழங்க நினைக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
துவ ஆ செய்யுங்கள்

நபி வழியே நமது வழி

நபி வழியே நமது வழி

போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்துஜனவரி 4ல் அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறு தொழில் உதவி

அல்லாஹ்வின் திருபெயரால்.....
நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500plot
கிளை சார்பாக சாலை தெருவை சேர்ந்த சகோதரி
ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிசின்
வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்துஜனவரி 4ல் அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழக்கரை கிளைகள் சார்பாக இந்த வருடம் காலண்டர் அடிக்கப்பட்டுள்ளது

பரிசு வழங்கும் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் திரு பெயரால்
நமது TNTJ 500 கிளை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
ஓதும் மாணவர்களில் சிறந்த முறையில் மனனம் மற்றும்
அழகியமுறையில் கிராத் ஓதும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
கடந்த 28 / 11 /10 அன்று நடை பெற்றது சகோதரர் சத்தார் அவர்கள் பரிசுகளை
வழங்கினார்

மருத்துவ உதவி

கீழக்கரையில் மின்சாரம் தாக்கி பலியான சகோதரர்
(இன்னா லில்லாஹி வஇன்ன இலைன ராஜிஹூன் )
ஒருவரின் ஜனாசவை சென்னைக்கு எடுத்து செல்ல
TNTJ கிளைகள் சார்பாக ருபாய் மூவாயிரம் வழங்கப்பட்டது

பாபர் மஸ்ஜித்






வருகிறது டிசம்பர் 6 அதை மாற்ற காத்திருக்கிறது ஜனவரி27
உன்னை நாங்கள் மறவோம் உயிர்களை இழக்க நாங்கள் துணிவோம்
உன்னை நாங்கள் இழக்கமாட்டோம் எங்களை இழந்தேனும் இறை இல்லத்தை மீட்போம்
இனி ஒரு பள்ளி அவர்கள் எண்ணத்தில் கூட நினைக்க விடமாட்டோம்
இடிகளாய் முழங்கி அவர்களின் இதயத்தை வெடிக்க செய்வோம்
அசத்தியவாதிகளின் அயோக்கியத்தனமான தீர்ப்பு உன்னை அபகரித்தாலும்
அல்லாஹ்வின் உதவி கொண்டு உன்னை நாங்கள் மீட்போம்
என முழங்கி அயோக்கியர்களும் ஆட்சியாளர்களும் அதிர
உச்ச நீதிமன்றமே உடனடியாக பாபர் மஸ்ஜிது வழக்கில் தலையிட்டு
நீதி வழங்கு என்று ஆர்ப்பரிக்க அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மதுரை மற்றும் சென்னையில்

மூட நம்பிக்கை





அல்லாஹ்வின் திருபெயரால்
கடந்த 30 வருடங்களாக ஏகத்துவ பிரச்சாரத்தையும்
மனித நேய பணிகளையும் ஒருகிணைந்து
செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்
ஒரு அங்கமான கீழக்கரை கிளையின் சார்பாக
இஸ்லாத்தில் நுழைந்து இருக்கும் மூட நம்பிக்கைகளை
கரம் கொண்டு தடுக்கும் வேலையில் இறங்கியது
அதன் ஒரு பகுதியாக வாசலில் கருப்பு கயிறால் கட்டப்பட்டு இருக்கும்
சீனாகாரம் என்ற பொருளை அந்த வீட்டின் உரிமையாளர்க்கு சத்தியத்தை
எடுத்து சொல்லி அவர்களுக்கு விளக்கி அவர்கள் வீட்டிலேயே கத்தியை வாங்கி
அதை வெட்டி எடுத்து கடலில் வீசினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
அறியாமை காலத்து மூட நம்பிக்கைகளை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்
என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்களே அதே போல் இன்ஷா அல்லாஹ்
இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் மூட பழக்க வழக்கங்களை அல்லாஹ்வின் உதவி கொண்டு
கடலுக்குள் மூழ் கடிப்போம் இன்ஷா அல்லாஹ்

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் உதவியால்

சங்குவெட்டி தெருவை சேர்ந்த
சகோதரி ஒருவர் தனது மகளின் காது அறுவை சிகிச்சைக்காக
மருத்துவ உதவி கேட்டு நம்மை நாடி இருந்தார்
அவருக்கு நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500plot
கிளை சார்பாக ருபாய் 5000 மருத்துவஉதவி செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிக் கல்லூரி

இன்ஷா அல்லாஹ் வரும் 07 /01 /2011
அன்று கீழக்கரையில் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக " ஷர ஹுல் ஹிக்மா பெண்கள் தவ்ஹீத் கல்லூரி
தொடங்க இருக்கிறது அதற்க்கான மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது
இக் கல்லூரியில் ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடம் ஆலிமா பயிற்சியும்
தாய்மார்களுக்காக ஆறுமாத பயிற்சியும் நடைபெற உள்ளது இது பற்றி நகர்
TNTJ செயலாளர் சகோதரர் அஸ்கர் அலி கூறியதாவது இப்பயிற்சி போக
மேலும் ஆங்கில பேச்சு பயிற்சி கம்ப்யுட்டர் அடிப்படை பயிற்சி
பேச்சு திறன் பயிற்சி போன்ற முக்கியமான பயிற்சிகளும் வழங்கபடுவதாகவும்
இக் கல்லூரிக்கு வரும் மாணவியர்களுக்கு இலவச வாகன வசதியும்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் இக்கல்லூரியை ஆய்ஷா பீவி தவ்ஹீத் மதரசாவில்
வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது கல்லூரியின் நிறுவனரும் மூத்த
தவ்ஹீத்வாதியுமான ஆய்ஷாஉம்மா அவர்கள் தனது சொந்த பொறுப்பில் நடத்த உள்ளார்கள்

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் உதவியால்

சின்னக்கடை தெருவை சேர்ந்த ஒரு
சகோதரி TP நோயால் அவதிபட்டு
மருத்துவ செலவிற்காக நம்மை நாடி இருந்த
அவருக்கு நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500plot
கிளை சார்பாக ருபாய் 2000 மருத்துவஉதவி செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

ஆஷுரா தினம்

காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...

“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்"! (அல்குர்ஆன் 9:36)

இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத் திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன.

நபி மூஸா(அலை) அவர்கள், அல்லாஹ்வின் கிருபையால் வெற்றிபெற்று கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட தினமான ஆஷுரா தினத்தை ஒரு சாரார் களங்கப்படுத்தி அதை துக்கமிக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

அலீ(ரலி) அவர்களை தூதராக ஏற்றுக் கொண்ட ஷியா கூட்டத்தினர், அலீ(ரலி) அவர்களின் மகனார் ஹூஸைன்(ரலி) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாளில் கொல்லப்பட்டார்கள் என்றும், அதற்காக துக்கம் அனுஷ்டிப்பதாகக் கூறி நெஞ்சில் அடித்துக் கொள்வது, ஒப்பாரி வைப்பது, ஊர்வலம் நடத்துவது, தீக்குண்டத்தை வலம் வருவது என்பன போன்ற வீணான காரியங்களை இஸ்லாத்தின் பெயரால் செய்து வருகின்றனர்.இவ்வாறு செய்வது பெரிய பாவமாகும். அது மட்டுமின்றி, எந்த ஒரு முஸ்லிமும் இப்படிச் செய்யக்கூடாது.
இது போன்று செய்தால் அவன் முஸ்லிம் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்... “கன்னத்தில் அடித்துக் கொண்டு, சட்டையைக் கிழித்துக்கொண்டு, அறியாமைக் காலத்து ஒப்பாரி வைப்பவன் என்னைச் சார்ந்தவனில்லை. அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 1294, முஸ்லிம் 148, திர்மிதி 920, நஸயி 1827

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால்,துக்கம் என்ற பெயரில் மார்பில் அடித்துக் கொள்ளும் இந்த ஷியாக் கூட்டத்தினரின் செயலை சிலர் முஸ்லிம்கள் பெரிய சாதனையை செய்து விட்டதைப்போல் ரசிக்கின்றனர். அங்கே ஒன்று கூடுகின்றனர். ஆனால் இது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தை யார் செய்தாலும் அதை தடுக்க வேண்டும். அதற்கு சக்தியில்லையென்றால் இஸ்லாத்திற்கே கேவலம் ஏற்படுத்தும் இவர்களின் காரியங்களை பார்த்து வேதனைப்பட்டு ஒதுங்கி விட வேண்டும்.

ஏனெனில்,
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...(கவலையின் போது) ஒப்பாரி வைப்பவனையும், தலையைமழித்துக் கொள்பவனையும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டு விலகிக் கொண்டேன் அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: முஸ்லிம் 149

இவர்கள்தான் இப்படியென்றால், தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் சிலரது காரியங்கள் இன்னும் படுமோசமாக இருக்கிறது. முஹர்ரம் பத்தாம் நாள் வந்த உடனேயே பஞ்சா எடுப்பது (ஐந்து விரல்களில் படும் அளவிற்கு மஞ்சளைக் கையால் தட்டி வீட்டுக் கதவுகளில் அப்புவது), ஹுஸைனார் பெயரில் மவ்லித் ஓதுவது, பத்தாம் நாளில் மட்டும் நோன்பு நோற்று யூதர்கள் வழியைப் பின்பற்றுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதுவெல்லாம் நபிகளாரின் வழிமுறைகளல்ல. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ ஸஹாபாக்கள் ஷஹீதானார்கள். ஸஹாபியப் பெண்கள் இறந்துள்ளார்கள். இவ்வளவு ஏன்? நபி(ஸல்) அவர்களுடைய பாசத்துக்குரிய மனைவி கதீஜா(ரலி) அவர்களும் இறந்துள்ளார்கள். இதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒப்பாரி வைத்தார்களா? நெஞ்சில் அடித்துக் கொண்டார்களா? சட்டையைக் கிழித்துக் கொண்டார்களா? தீக்குண்டத்தை சுற்றி வந்தார்களா? மொட்டையடித்துக் கொண்டார்களா? ஹுஸைனார் மவ்லித் ஒதினார்களா? இல்லவே இல்லை. நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டாத தடுத்துள்ள இந்த அனாச்சாரங்களை நாம் ஏன் செய்ய வேண்டும். இதனால் நன்மை கிடைக்குமென்றா? இல்லையே!. இது போன்ற காரியங்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள் என்றே நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புதிய அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் (தள்ளி) விடும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயி 1560

மேலும் ஆஷுரா தினம் என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எப்படி சிறப்பு தினமாக கருதப்பட்டு வந்தது என்பதையும் விளங்க வேண்டும். ஏனெனில் சிறப்பு என்று எண்ணி நம் சமுதாயத்தினர் தவறான காரியங்களை செய்து வருகின்றனர்.முஹர்ரம் பத்தில் மேற்கூறிய காரியங்களை செய்யாமல் நபி (ஸல்)அவர்கள் நோன்பு நோற்குமாறு கற்றுத் தந்துள்ளார்கள்

“ரமளான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 1962

“ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம் 1977

“நபி(ஸல்) அவர்கள் மதினா வந்தபோது ஆஷுரா தினத்தில் வேதக்காரர்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்போது வேதக்காரர்கள், இன்றைய தினம் மகத்துவமிக்கதாகும். அல்லாஹ் நபி மூஸா(அலை) அவர்களை காப்பாற்றி ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலில் மூழ்கடித்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக நபி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இவர்களைவிட நாம்தான் மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கூறி ஆஷ{ரா தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோற்குமாறு கட்டளையிட்டார்கள் அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்: புஹாரி 3145

“நபி(ஸல்) அவர்கள் மதினா வந்த போது எங்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது நபி மூஸா(அலை) அவர்கள் வெற்றி பெற்ற தினமாக இருப்பதால்) யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப் படுத்தும் தினமாயிற்றே என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அடுத்த ஆண்டில் முஹர்ரம் 9ம் நாளிலும் நோற்போம் என்று கூறினார்கள் அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அபூதாவூத் 2087

ஆகவே, மேற்காணும் விஷயங்களை நன்கறிந்து புனிதமிக்க ஆஷுரா தினத்தைக் கண்ணியமாகக் கருதி முஹர்ரம் 9-10ல் நோன்பு நோற்று நன்மைகளை பெறுவோம். அது மட்டுமல்லாமல் தேவையில்லாத, மார்க்கம் காட்டித் தராத காரியங்களை செய்வதிலிருந்து நம்மையும், நம்
குடும்பத்தினர்களையும் பாதுகாத்துக் கொள்வோம்!\
நன்றி லெப்பைக்குடிக்காடு TNTJ

TNTJ தெற்கு தெரு கிளையின் உள்ளரங்கு TNTJ தெற்கு தெரு கிளையின் கல்வி உதவி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த சனிக்கிழமை 04-12-2010 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:"சத்த்தார் அலி " அவர்கள் "அண்ணலாரின் ஐய்ந்து போதனைகள்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா...................................!

Friday, December 17, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 25-11-2010 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தை சேர்த்த முகம்மது கைய்ப் என்ற ஐய்ந்து வயது சிறுவனுக்கு மலக்குடல் அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவியாக ரூ. 3000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..............

Tuesday, December 14, 2010

TNTJ தெற்கு தெரு கிளையின் உள்ளரங்கு நிகழ்ச்சி




அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த செவ்வாய்கிழமை 14-12-2010 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:"முஹம்மதுமக்தூம் " அவர்கள் "முகர்ரம் மாதமும் மக்களின் அறியாமையும் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா...................................!

Monday, December 13, 2010

TNTJ தெற்கு தெரு கிளையின் கல்வி உதவி

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 11-12-2010 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக வெஸ்ட் பெங்காலை சேர்த்த சகோதரர் அப்சர் (ஹாபில்) அவருக்கு கல்வி உதவியாக இருக்கிறார் ரூ. 2200/- வழங்கப்பட்டது. (அவர் சென்ற வருடம் ரமலான் மாதம் நமது கிளையில் தயீயாக இருதவர்) அல்ஹம்துலில்லாஹ்......................

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 10-12-2010 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக பரமத்தி வியலூர், கரூர் மாவட்டத்தை சேர்த்த சகோதரர் முகம்மது இஸ்மாயில்(ஹாபில்) அவர் ஒரு விபத்தில் தன்னுடைய கை ,கால்களை சரியாக அசைக்க முடியாத நிலையில் இருக்கிறார் அவருக்கு மருத்துவ உதவியாக ரூ. 1000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............

Monday, December 6, 2010

TNTJ தெற்கு தெரு கிளையின் உள்ளரங்கு நிகழ்ச்சி


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த சனிக்கிழமை 04-12-2010 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:"சத்த்தார் அலி " அவர்கள் "அண்ணலாரின் ஐய்ந்து போதனைகள்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா...................................!

Friday, December 3, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 01-12-2010 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை புதுத் தெருவை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ. 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, November 30, 2010

கீழக்கரை TNTJ யின் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 25-11-2010 தேதியன்று கீழக்கரை TNTJ கிளைகள் சார்பாக கீழக்கரை "ஹுசைனியா மஹாலில்" "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஸ்லிமான மக்களின் மார்க்கம் சம்பந்தமான கேள்விகளுக்கும், இயக்கம் சம்பந்தமான குற்றச்சாட்டுகளுக்கும் சகோதரர்: P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ( மேலாண்மை குழு உறுப்பினர் ) சிறப்பாக பதிலளித்தார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...........!

Wednesday, November 24, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ பேருரை


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை 19-11-10 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்: "முஜீபுர் ரஹ்மான்" அவர்கள் "கொள்கை உறுதி " என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...........................!

கீழக்கரை TNTJ யின் குர்பான் விநியோகம்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த துல் ஹஜ்ஜ் மாதத்தில் கூட்டு குர்பானி(40 ஆடுகளும் , 18 மாடுகளும் , 2 ஒட்டகமும் ) கொடுக்க பட்டது இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்டகீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழைகுடும்பங்களுக்கு குர்பான் கறியாகவும் பணமாகவும் விநியோகம்செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..............!

Monday, November 22, 2010

ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகை



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 18-11-2010 அன்று நமது கீழக்கரை தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கிழக்குதெரு தைக்கதிடலில்(பால்பண்ணை) ஹஜ்ஜுபெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர்:- முஹம்மதுமக்தூம் அவர்கள் சிறப்பாக உரையாற்றினார். இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்............!



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 15-10-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை முஸ்லிம் பஜாரில் சகோதரர் :- செய்யத் அவர்கள் "ஹஜ்ஜு பெருநாள் ஏன் 17 ? என்ற தலைப்பில் உரைய்யற்றினார் இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ் ..............................!

பிறை விளக்க பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 15-10-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை முஸ்லிம் பஜாரில் சகோதரர் :- செய்யத் அவர்கள் "ஹஜ்ஜு பெருநாள் ஏன் 17 ? என்ற தலைப்பில் உரைய்யற்றினார் இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ் ..............................!

Monday, November 15, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 28-10-2010 தேதியன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை தெற்கு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:- முஹம்மது மக்தூம் அவர்கள் " சந்தனக்கூடும் இன்றைய பெண்களின் நிலையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....................!

Monday, November 8, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தொழில் உதவி


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 07-11-2010 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை புதுத் தெருவை சார்ந்த இட்லி விற்று பிழைக்கும் ஏழை சகோதரி ஒருவருக்கு தொழில் உதவியாக ரூ. 1000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் கிருபையால் 2010 ஆம் வருட கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹஜ்ஜுப்பெருநாள் கூட்டு குர்பானி திட்டத்தின் கூடு குர்பானி பிராணிகளின் விலை பட்டியலை நோடீசாக வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஆடு = ரூ. 4000/- மாடு ஒரு பங்கின் விலை = ரூ.1000/- ஒட்டகம் ஒரு பங்கின் னவிளை = ரூ.5000/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நாள் வரைக்கும் ஒரு ஒட்டகத்தின் பாங்குகள் முடிந்துவிட்டது.. ஆடு மற்றும் மாட்டு பங்குகள் வந்துகொண்டிருக்கின்றன....

Tuesday, November 2, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 5-10-10 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளை சார்பாக கீழக்கரை அண்ணா நகரை சார்ந்த 14 வயதுடைய மாற்று மத சிறுவனுக்கு காலில் அடிபட்டு காலை எடுக்க கூடிய சூழ்நிலையிலும் உயிருக்கு போறாடிகொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அவனை கிளை நிர்வாகிகள் சந்தித்து அவனுக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுக்கப்பட்டு அவன் இஸ்லாத்தை ஏற்றான். அவனுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக சென்னை G.H ல் சேர்த்து இந்நாள் வரைக்கும் ரூ. 10000/- க்கும் மேல் செலவு செய்து மருத்துவம் செய்யப்பட்டு வருகிறது.